ஈரான் மீது இரண்டாவது நாளாக புதிய தாக்குதல்களுக்கு உத்தரவிட்டுள்ள ட்ரம்ப், "மிகக் கடுமையாக" தாக்கப்போவதாக சூளுரைத்துள்ளார்
கடந்த புதன்கிழமையன்று அமெரிக்கா தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஈரான் மீது குண்டுவீசித் தாக்கியுள்ளது. கிழக்கு நேரப்படி மாலை 5:15 மணிக்கு ஈரானில் உள்ள "பல இலக்குகளை" தாக்கத் தொடங்கியதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. இந்த இலக்குகளில் ஆயுதக் கிடங்குகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ஆயுத சேமிப்புக் கிடங்குகள் ஆகியவை அடங்கும் என்று இரண்டு அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக சிபிஎஸ் நியூஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
